நடிகையை பார்த்து வாய்பிளக்கும் நடிகர்கள்!?

பெரிய நம்பர் நடிகை தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது கைவசம் பல படங்கள் இருந்த போதிலும், நடிகை சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஒரே விளம்பரத்தை பல விதமாக நடித்துக் கொடுத்திருக்கிறார்.

அதற்காக சம்பளமாக ரூ. 5 கோடி வரை நடிகை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விளம்பரத்தில் நடிக்க அந்த நடிகை 2 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.

பொதுவாகவே தமிழ் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களை தவிர்த்து மற்ற நடிகர்களுக்கு ஒரு படத்தில் நடிக்கவே ரூ. 5 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதில்லை. இந்நிலையில், நடிகை இரண்டே நாளில் ரூ.5 கோடி வாங்கியுள்ளாரா என்று வளர்ந்து வரும் நடிகர்கள் சிலர் வாயைப் பிளக்கிறார்களாம்.

ஆனால் நடிகைக்கு அதற்கு வொர்த்தானவர் தான் என்று கோலிவுட்டில் சிலர் நடிகைக்கு ஆதரவாகவும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]