நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது -ரம்யா நம்பீசனின் பகீர் தகவல்!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் ரம்யா நம்பீசன், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது உண்மை தான் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் வாய்ப்பிற்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக உள்ளதாக ஸ்ரீ ரெட்டி கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார், இதனையடுத்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ரம்யா நம்பீசன் அளித்த பேட்டியிலும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இல்லை என கூற மாட்டேன், என் தோழிகள் கூறி கேட்டிருக்கிறேன். இதையெல்லாம் நினைக்கும் போது வெட்கமாக உள்ளது என கூறியுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக இதுவரை எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை, இது போன்ற பிரச்சனைகளை பற்றி பேசி இனியும் நடக்காமல் இருக்க முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். சினிமா மட்டுமில்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]