நடிகர் விஷால் எடுத்த முடிவு!

சமீபத்தில் பீட்டா மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பாக விரும்பத்தகாத விமர்சனங்கள் காரணமாக நடிகை த்ரிஷா சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக வெளியேறினார் என்பதை பார்த்தோம்.

த்ரிஷாவை அடுத்து தற்போது நடிகர் விஷாலும் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக விஷால் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சிக்கப்பட்டு வந்ததால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் விஷால் சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும், அவரை மீடியாவில் உள்ளவர்கள் எந்த நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விஷால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ‘இரும்புத்திரை’ மற்றும் ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.