நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கும் கமல்ஹாசன்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அதைக் கண்டிப்பாக வரவேற்பேன் என உலகநாயகன் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டா் பக்கத்தில் ரசிகா்கள், கட்சி உறுப்பினா்கள், பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். #AskKamalHaasan என்ற ஹேஷ்டேக்கில் அனைவரும் கேள்விகளை எழுப்பினா். அந்த கேள்விகளுக்கு கமல்ஹாசனும் பதில் அளித்தார்.

எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.

அப்போது, ஒருவர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் (விஜய்) எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ள நிலையில், கமல் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]