நடிகர் ரன்வீர் சிங்கை நிர்வாணமாக புகைப்படம் எடுத்த ரசிகர்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் ரன்வீர் சிங்கை ரசிகர் ஒருவர் நிர்வாணமாக புகைப்படம் எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ரன்வீர் அளித்த பேட்டி ஒன்றில், ஜிம்மில் ஒர்க் அவுட் முடிந்து குளிக்க சென்றேன். குளித்து முடித்து வெளியே வந்தபோது, ஒருவர் தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் உடையை தேடாமல் அவரை விரட்டிச் சென்று போனை பிடுங்கி வீடியோவை அழித்ததாக ரன்வீர் தெரிவித்தார்.
மேலும், இது போன்று சிலர் உள்ளனர். என்ரசிகர்கள் யார், சேட்டை செய்பவர்கள் யார்என்று எனக்கு நன்றாக தெரியும்.

ஒரு முறைநான் கழிவறையில் சிறுநீர் கழித்தபோதுஒருவர் என்னை வீடியோ எடுத்தார். அவரிடம் இருந்தும் போனை வாங்கி வீடியோவை நீக்க வேண்டியதாகிவிட்டது. முதல் படத்தில் நடித்து முடித்திருந்தபோதுஜுஹு பகுதியில் உள்ள மால் ஒன்றுக்குசென்றேன். அந்த மாலில் வைக்கப்பட்டிருந்த’பேண்ட் பஜா பாரத்’ பட புகைப்படங்களைபார்த்துவிட்டு இந்த மூஞ்சி எல்லாம் ஒருஹீரோவா என்று கூறி மக்கள் நக்கலாகச்சிரித்தார்கள் என்றும் ரன்வீர் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பிய ’பத்மாவத்’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் அவரது நடிப்புக்கு சிறந்த அடையாளமாக பேசப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]