நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர்

சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘அடங்க மறு’ படத்தின் டீஸர் இன்று காலை 11 மணியளவில் வெளியானது.

படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். கார்த்திக் தங்கவேல் இயக்குகிறார். சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். சுஜாதா விஜயகுமார் படத்தின் தயாரிப்பாளர். படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

ஏற்கனவே சில படங்களில் போலீஸ் கெட்டப்பில் நடித்திருந்தாலும் இப்படத்தில் வித்தியாசமான போலீஸாக அடங்காத காவல் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ஆழமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று படத்தின் டீஸரை ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]