சென்னையில் தமிழ் நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
யாகாவராயினும் நாகாக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் துணை நடிகர் சித்தார்த். இவருக்கும், ஸ்மிரிராஜா என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், நேற்று இரவு ஹொட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்ற இவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் தனி அறையில் சென்று படுத்துக்கொண்ட மனைவி இரவு தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இது வெளியில் படுத்திருந்த நடிகருக்கு தெரியவில்லை.
காலையில் கண்விழித்து பார்த்தபோது தனது மனைவி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com