தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில் கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனர். கட்டிடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்கம் அறங்காவலர் ஐசரி கணேஷ் மற்றும் preview theatre கட்டும் செலவை சிவகுமார்,சூர்யா,கார்த்தி குடும்பத்தாரும் ஏற்றுகொண்டுள்ளனர் .பழம் பெரும் நடிகை வாணிஸ்ரீ – ரூபாய் 1,55,555/= , ராதா- ரூபாய் 1,00,000/=, ஜனனி- ரூபாய் 40,000/=,சத்யபிரியா- ரூபாய் 25,000=,ஜெயசித்ரா-ரூபாய் 10,000/=,நடிகர் சங்கம் பி.ஆர். ஒ. ஜான்சன் – ரூபாய் 60,000/= நன்கொடை அளித்துள்ளனர் .

நடிகர் சங்க கட்டிட

இதனை தொடர்ந்து நடிகை நிக்கி கல்ராணி 3 லட்சம் ரூபாய் கட்டிட நிதிக்காக நன்கொடை வழங்கி உள்ளார் .இதற்கான காசோலையை அவர்நடிகர் சங்கம் அலுவலகத்தில் நேரில் சென்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமன் அவர்களிடம் வழங்கினார். ஏற்கனவே நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்க கட்டிட

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]