முகப்பு Cinema நடிகர் கமல்ஹாசனுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார்

நடிகர் கமல்ஹாசனுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார்

நடிகர் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியாகவுள்ள அதேநாளில் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படமும் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ (கோகோ). அறிமுக இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதி, அனிருத் இசைமைத்து யூடியுப்-ல் வெளியான ‘கல்யாண வயசு’ பாடல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி யூடியூப்பை கலக்கி வருகிறது.

இத்திரைபடத்தின் படபிடிப்பு ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், பலர் திரையில் காண ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், இத்திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி அன்று வெளியாவதாக லைகா தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அதேபோல் சுதந்திரத்தினத்தை முன்னிட்டு கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ வெளியாக உள்ளது. ‘விஸ்வரூபம்’ பாகம் ஒன்றை பார்த்த ரசிகர்களுக்கு பல கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விக்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக பாகம் இரண்டு இருக்கும் என கமல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2’ உலகளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், ‘கோலமாவு கோகிலா’ படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் பாக்ஸ் ஆபிஸ் குறித்த கேள்வி சினிமாரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com