நடிகர் அர்ஜூன் என்னை படுக்கைக்கு அழைத்தார் – நடிகை ஸ்ருதி!

பிரபல நடிகர் அர்ஜூன் நிபுணன் பட படப்பிடிப்பின்போது தன்னிடம் தவறாக நடந்துகொண்டார் என மீடூ இல் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன் தெரிவித்திருந்தார்.

அதனை மறுத்த அர்ஜூன் நீதிமன்றத்தில் ஸ்ருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக ஸ்ருதி ஹரிகரனும் பொலிஸில் அர்ஜூன் ஓட்டலில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் ரிசார்ட்டுக்கு வருமாறு அழைத்தார் என்றும் புகார் அளித்தார்.

இதனால், அர்ஜூன் மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ருதி ஹரிகரன் பெங்களூருவில் பெண்கள் கமி‌ஷன் தலைவியை சந்தித்துள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, அர்ஜூன் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அதனை கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறேன்.

அர்ஜூன் ஆதரவாளர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்களால் எனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுகுறித்து பொலிசில் புகார் செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]