நடிகர் அஜீத்தை புகழ்ந்து தள்ளிய வைஷாலி – அப்படி என்ன பண்ணியிருப்பார்??

நடிகர் அஜீத் போல எல்லா பெண்களுக்கும் கணவர் அமைய வேண்டும் என்று நடிகை வைஷாலி கூறியுள்ளார்.

சின்னத்திரையில் நடிப்பவர்கள் வெள்ளித்திரையில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வருகின்றனர். அப்படி நடிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அப்படி ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகை வைஷாலி. இவர் தற்போது பிரபல தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ தொடரில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை வைஷாலியும், அவருடைய காதலர் சத்யதேவும் ஒரு பேட்டி கொடுத்தனர். அதில் அவர்கள் பேசும்போது, ‘‘அஜித்தை போல் கணவர் அமைய வேண்டும் என்று எல்லா பெண்களும் விரும்புவர். அது உண்மைதான். என்னுடன் பணிபுரிந்த பல பேர் அவரை பற்றி கூறியுள்ளனர். உடன் இருப்பவர்களுக்கு ஏதாவது உதவி வேண்டும் என்றால் உடனே செய்துவிடுவார். அவரை போல மற்றவர்கள் மேல் அக்கறை கொள்பவர்களைப் பார்க்க முடியாது என்று கூறியிருக்கின்றனர். எனக்கும் அவருடன் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’’ என பேசியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]