முகப்பு Cinema நடிகர் அஜித் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

நடிகர் அஜித் மகள் இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? புகைப்படம் உள்ளே

நடிகர் அஜித் அவருடைய மகள், மனைவி மற்றும் கலைஞர்களுடன் நின்று எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

தல அஜித்தை வைத்து ஹாலிவுட் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட விவேகம் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கைகோர்த்து விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் முடிக்கப்பட்டு போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் படப்பிடிப்பிற்கு பின் கிராமிய கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது.

இதை தொடர்ந்து அஜித் தன்னுடைய மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி மற்றும் ஒரு சிலர் மத்தியில் நின்று எடுத்து கொண்டுள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதில் அஜித் மிகவும் எளிமையாக, வெள்ளை தாடி மற்றும் வெள்ளை முடிகளுடன் உள்ளார். இதேவேளை, அவருடைய குழந்தை வளர்ந்து விட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com