நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் செய்த செயலால் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடம்!

நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் #HBDThalaAjith என்ற ஹெஷ்டேக்கை இந்தியளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.

அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானவர் நடிகர் அஜித். எந்த ஒரு சினிமா அடையாளமும் இல்லாமல், எவருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் தனியாக தன்னம்பிக்கையோடு சினிமாவின் நுழைந்து இன்று தன்னம்பிக்கையின் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

 

தமிழ் சினிமாவில் தனது இயல்பாலேயே பல ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் நடிகர் பட்டியலில் நடிகர் அஜித்குமாருக்கு என்றும் இடமுண்டு. அந்தவகையில் இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஏராளாமான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியான அஜித் புகைப்படங்களையும், #HBDThalaAJITH எனும் ஹேஷ்டேக்கையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். தற்போது இந்த #HBDThalaAJITH என்ற ஹெஷ்டேக்கை இந்தியளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]