முகப்பு Cinema நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் உள்ளே

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் உள்ளே

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்- இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகி வரும் 4-வது திரைப்படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

‘விஸ்வாசம்’ படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தில், படப்பிடிப்பு வேலைகள் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய இருக்கிறது. ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித் இரு வேறு தோற்றத்துக்கான காட்சிகளில் நடிக்கிறார்.

அஜித் தற்போது, இளமை தோற்றத்துக்கான காட்சிகளில் நடித்து வருகிறார். இயக்குநர் சிவா இதனை கமர்ஷியல் பேக்கேஜில் எடுக்க திட்டமிட்டுள்ளார்.

அஜித்துடன் பலர் போட்டோ எடுக்கும் புகைப்படம் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், அஜித்தின் புதிய தோற்றம் கொண்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில், அஜித் கருப்பு டி-சர்ட்டில் மிகவும் இயல்பாக இருப்பார்.

‘விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு நடிகை நயன்தாரா தனது முழு படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இப்படத்தில், தம்பி ராமையா, கோவை சரளா, போஸ் வெங்கட், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com