நடிகர் அசோக் திடீரென்று அவசர திருமணம் – ஏன் தெரியுமா?

நடிகர் அசோக் திடீரென்று அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார்.

சென்னையைச் சேர்ந்தவர் நடிகர் அசோக். தமிழில் முருகா என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து பிடிச்சிருக்கு, கோழி கூவுது, காதல் சொல்ல ஆசை, உலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, வானம் பார்த்த சீமையிலே, பிரியமுடன் பிரியா, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல், கண்ணகிபுரம் சந்திப்பு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், திடீரென்று காதலித்து பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

தில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதல் மனைவி சரண்யா வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் என்றாலும், பெற்றோர் சம்மதத்துடன் தான் எங்களது திருமணம் நடந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சில தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணத்தை அவசரமாக நடத்த வேண்டியதாயிற்று.

அதனால், நண்பர்களை அழைக்க முடியவில்லை. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் வரவேற்கயிருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]