நடிகரும், தயாரிப்பாளருமான சேகர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்…..

நடிகரும், தயாரிப்பாளருமான சேகர் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் . இவர் நடிகர் விஷ்ணுவர்தனின் தந்தையாவார்.

பரத், ஆர்யா நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த ‘பட்டியல்’ படத்தை சேகர் தயாரித்தார். அதன் பின்னர் பட்டியல் சேகர் என்ற பெயரில் வலம் வந்த இவர் ‘கழுகு’, ‘அலிபாபா’ ஆகிய படங்களையும் தயாரித்தார்.

விஷ்ணுவர்தனின் தந்தை மற்றும் தயாரிப்பாளருமான சேகர் கடந்த ஒரு வாரமாகவே உடல்நலக்குறைவால் தி. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை 7.30 மணிக்கு திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் உயிரிழந்தார். மேடவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.மறைந்த ‘பட்டியல்’ சேகரின் உடலுக்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]