நஞ்சற்ற முறையில் உற்பத்திசெய்யப்பட்ட உணவுப்பொருட் கண்காட்சி

மட்டக்களப்பு- கிரான் பிரதேசத்தில் நஞ்சற்ற முறையில் உற்பத்திசெய்யப்பட்ட உணவுப்பண்டங்களை உண்ணவேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு அறிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவுப்பொருட் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியானது கிரான் பிரதேச செயலாளர் சுந்தரமூர்த்தி ராஜ்பாபு தலைமையில் நடைபெற்றது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இக்கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்திருந்தனர்.

காளான், காய்கறிவகைகள், தானிய வகைகள், இலக்கறிவகைகள் மற்றும் தீன்பண்டங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன் நியாய விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இரசாயன மருந்துவகைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளினால் மக்களுக்கு அதிகம் தொற்றாத நோய்கள் ஏற்படுவதாக இங்கு எடுத்துக்கூறப்பட்டது.

தயாரிக்கப்பட்ட உணவுப்பண்டங்களை அதிதிகள் சுவைத்துப்பார்த்தனர்.

நஞ்சற்ற முறை நஞ்சற்ற முறை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]