யாழ். மாணவன் நஞ்சருந்தி தற்கொலை முயற்சி

உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக மாணவன் ஒருவர் நஞ்சு அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவன், நண்பர்களை விட அதிக பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக அவர் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மாலை நேரம் குறித்த மாணவனின் அறையில் அழுகுரல் கேட்டதையடுத்து அறைக்கு சென்று பார்த்த போது மாணவன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் மாணவனின் தந்தை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மாணவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]