நகை கொள்ளையில் ஈடுப்பட்ட யாழ் இளைஞர் கைது!

பெண்களின் நகைகளைக் கொள்ளையடித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொள்ளையடிக்கப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்.அரியாலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சுதர்சன் என்ற இளைஞரே இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் வலய புலனாய்வு பிரிவினர்க்கு கிடைத்த தகவலுக்கு அமைய சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாண பகுதிகளில் தனிமையில் செல்லும் பெண்களின் தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர் ஒருவர் கொள்ளையடிக்க பயன்படுத்திய மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.

தொடர் விசாரணை மூலம் கொள்ளையடித்து விற்பனை செய்யப்பட்ட நகைகளில் ஒரு தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையில் சாவகச்சேரி பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]