முகப்பு Cinema நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளிய விஜய்- வைரல் புகைப்படம் உள்ளே

நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் கன்னத்தை கிள்ளிய விஜய்- வைரல் புகைப்படம் உள்ளே

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘சர்கார்’. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு தீவிரமாகும் நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரத்தை, இயக்குநர் ரகசியமாக வைத்திருக்கிறார்.

இப்படத்தில் நடித்து வரும் வரலட்சுமி, படப்பிடிப்பு தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதில் மறைமுகமாக ஏதேனும் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று தனது டுவிட்டரில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு பெண் வேடத்தில் காட்சியளிக்கிறார். அவரது கன்னத்தை ஒருவரின் கை கிள்ளி விட்டுச் செல்கிறது.

இந்த வீடியோ உடன், மீண்டும் சர்கார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளேன். இது யாருடைய கை என்று கண்டுபிடியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இது தளபதி விஜய்யின் கை தான் என்று அனைவரும் கணித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com