நகைக்கடை கொள்ளை சந்தேக நபர் பொலிஸாரால் சுட்டுகொலை

மாத்தறை நகரத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரான சாமர இந்திரஜித், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

முன்னதபாக, சந்தேகநபர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், சந்தேகநபர் மறைத்து வைத்திருந்த பை ஒன்றை எடுக்க பொலிஸார் அவரை அழைத்துசென்றுள்ளனர்.

இதன்போது, பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்த சந்தேக நபர் முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாமர இந்திரஜித், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]