நகர சபை தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட 8 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் செல்ல இவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலையில் 5 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தலைவர் அசோக்க சேபால உள்ளிட்ட 8 பேருக்கும் பிணை வழங்கிய நீதவான், வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி சிறுமி கடத்தல் விவகாரம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறுநாள் குழந்தையின் தாய் உள்ளிட்ட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]