த.தே.கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐ.தே.கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது- தயாசிறி ஜயசேகர தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள். இந்த மனக் கசப்புகளுடன்தான் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்வதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதியை காப்பாற்றவே வரவு செலவு திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை எனவும்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]