த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய பிரபல நடிகை!

 

த்ரிஷாவுக்காக பாட்டு பாடிய பிரபல நடிகை!

கொலிவுட்  திரையுலகில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக இருந்து வரும் த்ரிஷா, இப்போதும் பிசியான நடிகையாக கொலிவுட்டில் வலம் வருகிறார்.

இவர் நடித்த ‘மோகினி’ திரைப்படம் இம்மாதம் வெளிவரவுள்ள நிலையில், தற்போது இவர் அரவிந்தசாமியுடன் ‘சதுரங்க வேட்டை 2’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடல் நேற்று ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

அஸ்வின் விநாயகமூர்த்தியின்  இசையில் உருவான இந்த பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். ஏற்கனவே ரம்யா நம்பீசன் பல தமிழ், மற்றும் மலையாள திரைப்படங்களில் ஏராளமான பாடல்களை பாடியிருந்தாலும் த்ரிஷாவுக்காக பாடுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் மனோபாலா தயாரிக்கும் இந்த படத்தில்,  அரவிந்தசாமி, த்ரிஷா, பூர்ணா, நாசர், ராதாரவி, ஸ்ரீமான் உட்பட  பலர் நடித்து வருகின்றனர்.

நிர்மல் குமார் இயக்கி வரும் இந்த படத்திற்கு வெங்கடேஷ் ஒளிப்பதிவும், ராஜா சேதுபதி படத்தொகுப்பு பணிகளையும் செய்து வருகின்றனர்.