தோரணங்கள் தொடர்பில் அறிவுறுத்தல்

வெசாக் அலங்கார தோரணங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கும்போது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அவதானமாக செயற்படுமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், விபத்து தொடர்பான அவதானத்துடன், மின்சார இணைப்புகளை பயன்படுத்துவது, அதனை ஏற்பாடு செய்பவர்களின் பொறுப்பு எனவும், அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எந்தவொரு வெசாக் தோரணங்களுக்கும் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளவதற்கான அனுமதியை, பிரதேச மின் பொறியியலாளர் அலுவலகம் அல்லது மின்சார சபை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விசேடமாக, மின்சாரம் தொடர்பில் ஏற்படும் முரண்பாடுகளுக்கும் குறித்த அலுவலகங்கள் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுலக்ஷனா ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]