தோனி பதவி விலகியதற்கு இவர்கள் தான் காரணம்!

இந்திய ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து தோனி விலகியதற்கு காரணமானவர்கள் குறித்து பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்தயா அதிரடியாக கூறியுள்ளார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் T20 அணித்தலைவராக திகழ்ந்த தோனி சமீபத்தில் அதிரடியாக பதவி விலகுவதாக அறிவித்தார். இது, கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 35 வயதான தோனி பதவி விலகியதற்கான காரணம் குறித்து பல புரளிகள் பரப்பப்பட்டு வந்த நிலையில், பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆதித்தயா அதிரடியாக யார் காரணம் என்பதை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, தோனி பதவி விலகியது அவரது சொந்த முடிவு அல்ல என்றும் பிசிசிஐ கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.

பிசிசிஐயின் இணைச் செயலாளர் அமிதாப் சவுத்ரி கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே தோனி பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.