தோட்ட தொழிலாளர்களுடைய பணி பகிஷ்கரிப்பு போராட்டம் வெற்றிபெரும் – ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களினால் முன்னெடுக்கபட்டு வரும் பணி பகிஷ்கரிப்பானது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று (05) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற தொழிலாளர்களை தோட்டவாரியாக சென்று சந்தித்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், மலையகம் எங்கும் இரண்டாவது நாளாக இந்த பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றால் தொழிலாளர்களின் பணி பகிஷ்கரிப்பு வெற்றி பெறும் கடந்த மாதங்களில் எமது தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள பிரச்சினை தொடர்பில் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், வெளிநாடுகளில் வாழும் எமது தமிழ் உறவுகள், வடகிழக்கு தமிழ் மக்கள் மற்றும் கொழும்பு காலிமுகத்திடலில் கூடி தமது பெற்றோர்களுக்காக போராடிய மலையக இளைஞர்கள் ஆகியோர் கம்பனிகாரர்களுக்கு எதிராக எதிர்பினை வெளிபடுத்தி ஒரு அழுத்தத்தை கொடுத்து இருந்த போதும், நமது இனத்தை சேர்ந்த சிலர் நம்மை காட்டிக் கொடுக்க முயற்சி செய்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்

மலையகத்தில் உள்ள அனைத்து தோட்ட புறங்களிலுமே இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டமானது வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. கம்பனிகாரர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என வழியுறுத்தி வந்துள்ள போதிலும் அவர்கள் 600 ரூபா அடிப்படை சம்பளம் தருவதாக கூறியிருந்தார்கள்.

ஆனால் இந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளபட்ட பணி பகிஷ்கரிப்பின் பிறகு ஒரு சில கம்பனிகாரர்கள் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு 650 ரூபா தருவதாக கூறினார்கள். நாங்கள் தொடர்ந்து அவர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதோடு இந்த அழுத்தத்தின் காரணமாக தோட்ட தொழிலாளர்களுடைய பணி பகிஷ்கரிப்பு போராட்டம் வெற்றிபெரும் எனவும் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]