தோட்டமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்கத்திட்டம் – அமைச்சர் திகாம்பரம்

தோட்ட மக்கதோட்டமக்களுக்கு  காணிளுக்கு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வேலைத்திட்டத்திலான வீடுகளுக்கு உரிய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் சமர்ப்பித்த ஆவணங்களை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது என்று பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

நுவரெலியா, பதுளை, கேகாலை உட்பட சில மாவட்டங்களில், 2010ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பல்வேறு வீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தோட்ட தொழிலாளர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற வீடுகளுக்காக சுதந்திர உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான செயற்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]