தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது

அரச தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, 17 இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த, கடற்படை சிப்பாய், மொனராகலைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலாளர் ஊடாக அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருவதாகக் கூறி, மொனராகலை மற்றும் படல்கும்பரை பகுதிகளின் இளைஞர், யுவதிகளிடம் இவ்வாறு பணமோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவரது மோசடி குறித்து, படல்கும்பறை மற்றும் மொனராகலை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதனையடுத்து, பதுளையைச் சேர்ந்த சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.