தொழில்சங்கம் அனைத்தும் ஒன்று கூட வேண்டும்

பெருந்தோட்ட நிறுவனங்களால் காணிகள் தமக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளதாக டிக்கோயா டிலரி மேற்பிரிவு மக்கள் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பல தரப்பினரும், பெருந்தோட்ட தொழிலாளர்களை கவரும் வகையிலான சலுகைகள் வழங்கப்பட்டு, காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களை ஏமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்டத்தை பராமரிப்பதற்கு அவசியமான சலுகைகளை பெற்று கொடுப்பதாக கூறி தோட்ட நிறுவனங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் பகிர்ந்தளித்துள்ளது.

இதற்கான உடன்படிக்கை 03 மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தொழிலாளர்கள் விரும்பினால் குறித்த பணியை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கும் விரும்பாவிட்டால், பணியில் இருந்து விலகுவதற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என நிர்வாகத்தினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களும் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களினால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் தோட்ட தொழிலாளர்கள் கடந்த காலங்களில் குத்தகை காணிகளில் தமது பணிகளை முன்னெடுத்து வந்தனர்.

எனினும் பெருந்தோட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் பராமரிப்பு சலுகைகள் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத அதேவேளை, அங்கு பணிப்புரியும் தொழிலாளர்கள் தொடர்ச்சியான பணிக்கு நிர்பந்திக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.

இது குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது, நாடாமன்ற உறுப்பினர் வேலுகுமார் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, தொழிற்சங்கங்கள் அறியாத வண்ணம் பெருந்தோட்டங்களால் தொழிலாளர்களுடன் மறைமுக உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டும், கவர்ச்சியான சலுகைகளை வழங்கியும் அவர்களை குத்தகை முறையிலான பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

குத்தகை முறையின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களை அநீதிக்கு உட்படுத்தும் நிலை தொடரும்பட்சத்தில் தோட்டத் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]