முகப்பு News Local News ‘தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்’

‘தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்’

30 வருடகாலமாக நாட்டை சீர்குலைத்த பயங்கரவாதத்தை தோற்கடித்ததை போன்று, தொழிற்சங்க பயங்கரவாதத்தை ஆரம்பத்திலே தோற்கடிப்பதற்கு தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் சார்பில் அமைச்சர் சாகல ரத்நாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பலவீனமாக கருதக்கூடாது.

இந்த தொழிற்சங்க பயங்கரவாதத்தை தோற்கடித்து நாட்டு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கமானது, அதிகளவான அர்பணிப்பை வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள திடீர் வேலைநிறுத்த போராட்டத்தை, வரலாற்றில் கரும்புள்ளியாக அடையாளப்படுத்த முடியும்.

புகையிரத ஊழியர்களால் நேற்று முன்தினம் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பானது, தொழிற்சங்க பயங்கரவாதமாகும்.

அலுவலக பணிகளை நிறைவு செய்து வீடுகளுக்கு திரும்பும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்கள், புகையிர ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன், இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக குறித்த தொழிற்சங்கங்களின் குறுகிய நோக்கம் வெளிப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com