தொழிற்சங்கப் போராட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தடுக்க அரசு விசேட குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக திறன் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் இருக்க விசேட குழுவொன்றை அமைக்க ஜனாதிபதியும், பிரதமருக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்று சைட்டம் எதிர்ப்புப் போராட்டத்தில் நாட்டின் அரச மற்றும் தனியார் வைத்திய சேவைகளும், போக்குவரத்தும் முடங்கியிருந்தன. எதிர்காலத்தில் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போதும் அதில் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் இருக்கவே விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியும் அமைச்சரவை அளித்துள்ளது. விரைவில் குறித்த குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]