தொல்பொருட்களை ஏமாற்றி விற்ற வர்த்தகர்கள்

இலங்கையின் தொல்பொருட்கள் சிலவற்றை வெளிநாட்டுக்கு கொண்டுசெல்ல முயற்சித்த இரண்டு சம்பவங்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதிவாகியுள்ளதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த பொருட்களை கொண்டு செல்வது சட்டவிரோதமானது அல்ல என்று தெரிவித்து சுற்றுலாப்பயணிகளிடம் சிலர் விற்பனை செய்துள்ளதாக சுங்க திணைக்கள பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.