தொலைக்காட்சி தொகுப்பாளினி தற்கொலை

தொலைக்காட்சி நடிகைகள் தற்கொலை செய்வது அதிரித்து வரும் நிலையில் பிரபல தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளமை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு சினிமாவில் பிரபல தொகுப்பாளினி ராதிகா ரெட்டி, 5ஆவது மாடியில் இருந்து நேற்று(01) குதித்து தற்கொலை செய்துள்ளார்.

அதோடு தான் இறப்பதற்கு என்ன காரணம் என்றும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் அவர், மன அழுத்தம் காரணமாக நான் என்னை கொலை செய்கிறேன், யாரும் இதற்கு காரணம் இல்லை. என்னுடைய மூளையே எனக்கு எதிரி என்று எழுதியுள்ளார்.

ராதிகா ரெட்டி கடந்த 6 மாதத்திற்கு முன் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு 14 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]