தொப்பையை குறைக்க முடியாமல் தவிப்பவர்களா நீங்க?

தொப்பையை குறைக்க முடியாமல் தவிப்பவர்களா நீங்க? அப்படி எனில் இதில் ஒரு முறையை முயற்ச்சித்து பாருங்கள்.

இஞ்சி,எலுமிச்சை சாறு

தினமும் இஞ்சி போட்டு கொதிக்க வைத்த நீர் வெதுவெதுப்பான பின் எலுமிச்சை சாறு கலந்து சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து குடித்தால் ஒரே வாரத்தில் உடல் எடை குறைவதை கான்பீர்கள். இதிலுள்ள சிட்ரிக் அமிலம், மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த விட்டமின் சி கொழுப்பை வேகமாக கரைக்கும்.

திராட்சை

ஒரு ஆராய்ச்சியில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் உள்ள கார்போஹைட்ரேட் எனர்ஜியை தருகிறது. காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக்கொண்டால், இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.

அன்னாசிப் பழம்

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு மிகச் சிறந்த பழங்களில் ஒன்று அன்னாசி. இதிலுள்ள ப்ரோமைலைன் கொழுப்பை வேகமாக குறைக்கிறது. ஜீரண சக்தியை அதிகமாக்கும். கலோரி மற்றும் கொழுப்பை உடனுக்குடன் எரிப்பதால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும். அன்னாசிப் பழம் சூட்டைத் தரும், அதனால் அளவாகத்தான் சாப்பிட வேண்டும்.

தக்காளி

கொழுப்பை கரைப்பதில் தக்காளிக்கு முதன்மையானது. தக்காளியிலுள்ள லைகோபீன் வேகமாக மெட்டபாலிசத்தை தூண்டுகிறது. இதனல் கொழுப்பு சேமிக்கப்படாது எரிக்கப்படுகிறது. தக்காளியை சாறு அல்லது சூப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]