தொண்டமான் பயிற்சி நிலையத்திற்கு 199 மில்லியன் நிதி உதவி

தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்துக்கு இந்திய அரசாங்கம் 199 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளது.

அமைச்சர் திகாம்பரத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த நிதி உதவி வழங்கப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொழில்பயிற்சி நிலையமானது மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஹட்டனில் இயங்குகின்றது.

இந்த நிலையில், நிதியுதவி வழங்குவது தொடர்பான இது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தர்ஜித் சிங் சந்து ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த நிதி உதவியை வழங்கியமைக்காக மலையக மக்கள் சார்பில் அமைச்சர் பழனி திகாம்பரம் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]