தொடர் வீட்டுத்தொகுதியில் தீ -9 வீடுகள் சேதம்!!

தெமட்டகொட, மௌலான தோட்டப்பகுதியில் உள்ள தொடர் வீட்டுத்தொகுதி ஒன்றில் நேற்று (19) இரவு 9 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

தெமட்டகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு மற்றும் பிரதேவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக 9 வீடுகள் சேதமடைந்துள்ளன. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]