தொடர் தோல்விக்கு என் மீது மட்டும் பழி சுமத்துவது சரியில்லை – மத்தியூஸ்

தொடர் தோல்விக்கு என் மீது மட்டும் பழி சுமத்துவது சரியில்லை – மத்தியூஸ்

என்னை அணித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளரான ஹத்துரு சிங்க தெரிவித்ததன் பிரகாரம் நான் எனது தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். மற்றும் தகுதியற்றவன் என்று நினைத்தால் நான் எனது ஓய்வை அறிவிக்க தயாராகவுள்ளேன்.

ஏஞ்சலோ மத்தியூஸ் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு எழுதிய உருக்கமான கடிதம்

அந்தக் கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தார்.

கடந்த 21 ஆம் திகதி வௌ்ளிக்கிழமையன்று இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஹத்துரு சிங்க ஆகியோர் என்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

என்மீது இலங்கை அணி ஆசிய கிண்ணத் தொடரில் சந்திந்த சந்தித்த தோல்விகளின் முழுப் பாரத்தையும் என் மீது சுமத்தி என்னை பலிக்கடாவாக்கியுள்ளனர்.

அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே முழுப்பொறுப்பும் என்று அவர்கள் தெரிவிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆனாலும் தெரிவுக்குழு மற்றும் பயிறிசியாளரின் முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

என் தலைமைப்பொறுப்பில் இலங்கை அணி பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்தது. அதில் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வெள்ளையடிப்புச்செய்தது. இதைவிட இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று சாதனை படைத்தது.

எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு புதிய தலைமைத்துவம் வேண்டுமென உணரப்பட்டவேளையில் நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து கடந்த 2017 ஜூலை மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் அணித் தலைமையில் இருந்து விலகியிருந்தேன்.

இவ்வாறு நான் விலகிய காலப்பகுதியில் உபுல் தரங்க, திஸர பெரேரா, சாமர கப்புகெதர, லசித் மாலிங்க மற்றும் டினேஸ் சந்திமல் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மாறிமாறி அணிக்கு தலைமை தாங்கினர்.

இந்நிலையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்தபேது இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக்கிண்ணம் வரை அணித் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

தலைமைப்பெறுப்பை மீண்டும் எடுப்பதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் ஹந்துருசிங்க மீதும் அவரது திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கையினால் நான் அந்தப்பொறுப்பை மீண்டும் எடுத்து அணியை பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு இட்டுச்செல்ல இணங்கினேன்.

இந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிடுவது எனது நோக்கமல்ல. விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் முழு மனதுடன் எவ்வேளையிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவேன்.

இதேவேளை, நான் எந்தவேளையிலும் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. தேர்வுக்குழுவோ தலைமைப் பயிற்சியாளரோ நான் அணிக்கு தகுதியற்றவன் என்று தெரிவிக்கும் பட்சத்தில் நான் ஓய்வுபெறவும் தயாராகவுள்ளேன் என அவரது கடிதத்தில் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

மத்தியூஸ் மத்தியூஸ் மத்தியூஸ்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]