தொடர்ந்து வில்லி வேடங்களில் களமிறங்கவுள்ள சிம்ரன்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை சிம்ரன். அவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

அதன் பின்னரான காலப்பகுதியில் வாய்ப்புகள் கை நழுவி போனதால் சினிமா பக்கம் கூட அவரை காண முடியாமல் இருந்தார்.

ஒரு சில படங்களில் மட்டுமே சிறு சிறு கதாபாத்திரங்களில் கலக்கி வந்த அவர், சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் காளீஸ்வரி என்னும் கதாபாத்திரத்தில் அதிரடி வில்லியாக நடித்துள்ள சிம்ரனுக்கு தொடர்ந்து வில்லி வேடங்கள் வருவதாக கூறப்படுகின்றது.

பொன் ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘சீமராஜா’. கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார்.

மற்றம் சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ஆம் திகதி உலகம் முழுவதும் இப் படம் ரிலீஸாக இருக்கிற நிலையில், இந்தப் படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் – பொன் ராம் கூட்டணியில் இதற்கு முன்னர் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தை போல இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]