தொடர்ந்து உயிர்பலி வாங்கும் ‘விஸ்வாசம்’- வேறு என்னவெல்லாம் நடக்கபோகிறதோ??

நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெற்றி அடைந்து ஒருபுறம் கொண்டாடப்பட்டு வந்தாலும், அத்திரைப்படம் சார்ந்த தொடர் உயிரிழப்புகள் பலரை சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக திருக்கோவிலூரில் நிகழ்ந்த கட் அவுட் சரிந்த விபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உசிலம்பட்டியில் அஜித்தை தவறாக பேசியதாக விஜய் ரசிகர் ஒருவர், விஸ்வாசம் திரையரங்கு முன்பு அடித்துக் கொல்லப்பட்டார்.

இது போக வேலூரில், விஸ்வாசம் பார்க்க பணம் தர மறுத்த தந்தையை, எரித்து கொலை செய்ய முயன்ற அஜித் ரசிகர் ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் அதே பகுதியில், விஸ்வாசம் பார்க்க சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ரசிகர்கள் இருவர் கத்திக்குத்துக்கு ஆளானார்கள்.

இப்படி பல வன்முறை சம்பவங்களால் ஏற்பட்ட வடுக்களே இன்னும் மறையாத நிலையில், ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது அஜித் ரசிகர் ஒருவரின் மர்ம மரணம்.

புதுச்சேரியில், விஸ்வாசம் திரைப்படத்தினை விசிலடித்து கொண்டாடிய படி பார்த்த அஜித் ரசிகர் ஒருவர், அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

ஆரம்பத்தில் போதையில் அவர் மயங்கி விழுந்ததாகவே நினைத்து பிற ரசிகர்கள் விட்டுவிட, படம் முடிந்து எழுப்பும் போதுதான் தெரிந்திருக்கிறது அவர் உயிரிழந்து கிடந்தது.

தொடர்ந்து ரசிகரின் உடல் உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மர்ம மரணத்திற்கான காரணம் விரைவில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]