தொடர்ச்சியான மழை காரணமாக மட்டக்களப்பில் முகத்துவாரம் வெட்டப்பட்டது

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகப் பெய்துவந்த மழை காரணமாக மாவட்டத்தின் கிரான், வவுணதீவு, பட்டிப்பளை ஏறாவூர் பற்று உள்ளிட்ட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் மட்டக்களப்பு முகத்துவாரம்  வியாழக்கிழமை (08) பகல் வெட்டப்பட்டது.

கடந்த 3 நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை இன்று(08) சற்றுக் குறைந்துள்ளதுடன் காலநிலையும் சீரான போதும் மீண்டும் பகல் வேளைக்குப்பின்னர் மழை ஆரம்பித்திருக்கிறது.

தொடர்ச்சியாக பெய்த மழையால் மாவட்டத்தின் தாழ் நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த 500 வரையான குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியான தொடர்ச்சியான தொடர்ச்சியான

இந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாநக மேயர் தி.சரணவபவன், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதரசினி சிறிகாந்த், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் மற்றும் அதிகாரிகளும் முகத்துவாரம் வெட்டப்படும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]