தொடரூந்து போக்குவரத்து பாதிப்பு

பொல்கஹவலையில் நேற்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தினால் குறித்த தொடரூந்து போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் தாமத்தித்தேனும் தொடரூந்து சேவையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் 32 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த தொடரூந்து பனலிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

பிற்பகல் 4.50 அளவில் கொழும்பிலிருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த தொடரூந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடரூந்தில் பின்புறம் சென்று மோதியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் பொல்கஹவெல, கேகாலை மற்றும் ரம்புக்கனை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]