தொடரும் வாள்வெட்டு மூவர் வைத்தியசாலையில்…

கிளிநொச்சி இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில், யாழ். பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த மூவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்தில், வெட்டுக் காயங்களுக்கு இலக்கானவர்கள் யாழ். பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த 35,25,19 ஆகிய வயதை உடைய ஆண்களே எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ் வாள்வெட்டு சம்பவம் ஆனது குடும்பத் தகராற்றினால் இடம்பெற்றுள்ளது என களைபொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளைப் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]