தைரியம் இருந்தால் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டுங்கள்- மைத்திரி,மஹிந்தவிற்கு சஜித் விடுத்த சவால்

தைரியம் இருந்தால் நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபித்துக் காண்பிக்குமாறு முன்னாள் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

ஏழைகள், விவசாயிகள் தொழிலாளர்களுக்கும் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளத் தயார். எனது தீர்மானம் கட்சியின் தீர்மானமாகும்.

முடிந்தால் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு செல்லுமாறு மஹிந்த – மைத்திரி தரப்பிற்கு சவால் விடுக்கின்றேன்.

இன்று நாட்டில் இருக்கும் பிரச்சினை மனிதாபிமானத்திற்கும் அமானுஸ்யத்திற்கும் இடையிலான போராட்டமாகும். நேர்மையான ஆட்சிக்கும், காட்டு ஆட்சிக்கும் இடையிலான போராட்டமாகும்.

ஜனநாயகத்திற்காக நடு வீதியில் உயிரைத் தியாகம் செய்யத் தயார். பலர் நினைத்துக் கொண்டிருந்தனர் பாரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்று.

நாட்டில் மிக உச்ச அளவில் நீதிமன்றக் கட்டமைப்பு சுயாதீனமாக இயங்குவதனை, நாம் எமது கண்களினால் பார்த்தோம் செவிகளினால் கேட்டோம்.

குண்டுகளுக்கு, பீரங்கிகளுக்கு நாம் அஞ்சப் போவதில்லை, சபாநாயகரின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஜனநாயகம் நிச்சயமாக வெற்றியீட்டும். நேற்று முன்தினமும் வெற்றிபெற்றோம்,

நேற்றும் வெற்றினோம், இன்றும் வெற்றிபெற்றோம். நாளை முடிந்தால் நாடாளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்திக் காட்டுமாறு சவால் விடுகின்றோம்.

மக்கள் கோரினால் பின்னால் செல்லவும், ஒதுங்கியிருக்கவும், முன்னோக்கிச் செல்லவும் நான் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]