தேவை ஏற்பட்டால் அரசியலுக்கு வருவேன்: கோட்டா

தேவை ஏற்பட்டால் அரசியலில் வருவது பற்றி முடிவு செய்வேன் என, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டபாய ராஜபக்ஷ அரசியலில் நுழையவுள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வருவது தொடர்பில் நான் திட்டமிடவில்லை. தேவைப்பட்டால் முடிவு செய்வேன். சாத்தியமான எல்லா வழிகளிலும் நாட்டுக்குச் சேவையாற்றுவதற்கே நான் விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியலில் இறங்கினால் முதலாவது அல்லது இரண்டாவது, அல்லது மூன்றாவது என்பது பிரச்சினையே அல்ல. என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]