தேவைகளை பகிரங்கப்படுத்துவோரை அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது

தமிழ் மக்களின் தேவைகளை பகிரங்கப்படுத்துவோரை அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே நோக்குவதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அலுவலக திறப்பு விழாவில் அவர் இன்று இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் பிரதிநிதிகளின் ஆதரவுடன் மூன்று வரவு –செலவுத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அதில் தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய ஒதுக்கீடுகளோ, திட்டங்களோ உள்வாங்கப்படாமை கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதனை பகிரங்கப்படுத்தினால் அரசாங்கம் பயங்கரவாதிகள் என, அடையாளப்படுத்துவதாகவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]