தேர்தல் வன்முறை குறித்து 154 முறைப்பாடுகள்

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் சட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பு ராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதில் தேர்தல் சட்டங்களை மீறுவோர் மீதான சட்ட நடவடிக்கை, அவற்றை கட்டுப்படுத்தும் வியூக முறைகள் போன்றன பேசப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை, 154 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]