தேர்தல் வன்முறைகள் தொடர்பில் முறையிடுங்கள்

பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான வன்முறைகள் தொடர்பில் முறையிடும் பொருட்டு, 24 மணிநேர அவசர தொலைபேசிச் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்துவரும் பொலிஸ் பிரிவால், குறித்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, 011 2543811, 011 2387999 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 011 2327706, 011 2440433 ஆகிய பெக்ஸ் இலக்கங்களுக்கோ அல்லது [email protected] என்ற இணையத்தள முகவரி ஊடாகவோ, பொதுமக்கள் தமது முறைப்பாடுகளை உடனடியாக அறிவிக்க முடியும் என, பொலிஸ் தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் வசிப்பவர்கள், கொழும்பு மத்தி – 011-2433829,
கொழும்பு வடக்கு – 011-2436349
கொழும்பு தெற்கு – 011-2588680
கல்கிஸை – 011-2732916
நுகேகொடை – 011-2829388
கம்பஹா – 033-2222223
நீர்கொழும்பு – 031-2222788
களனி – 011-2911774
களுத்துறை – 34-2236409
பாணந்துறை – 038-2233228 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க முடியும் என்றும், பொலிஸ் தேர்தல் அலுவலகம் மேலும் அறிவித்துள்ளது.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]