தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு – 197 கைது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் இதுவரையில் 241 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பேராதனை, எம்பிலிப்பிட்டிய, நிட்டம்புவ, சேருநுவர, களுத்துறை வடக்கு, மீப்பே மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 07 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 09 ஆம் திகதி முதல் இன்று வரையான காலத்திற்குள் தேர்தல் முறைப்பாடுகளுக்கு அமைவாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.