தேர்தல் முறைபாடுகளுடன் தொடர்புடைய 34 பேர் கைது

உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை 32 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

உள்ளுராட்சி சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 9ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப் பகுதியில் இந்த முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]